Monday, 21 May 2012

பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் : கடலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாகற்காய் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் வருமானத்திற்கு ஏதுவாக கத்தரி, வெண்டை, மிளகாய் என பல்வேறு வாணிப பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தற்போது, மருத்துவ குணம் நிறைந்த பாகற்காய் சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். சமப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைகளை விதைப்பர். குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் மேல் பகுதியில் வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துவர். இதில் கொடியை ஏற்றி படர செய்வர். 150 நாட்கள் வரை பயன்தர கூடிய பயிராகும். 45 நாட்களில் கொடிகளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு ஸி60 ஆயிரம் வரை செலவாகும். இங்கு பறிக்கப்படும் காய்கள் சென்னை, கும்ப கோணம், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய மார்கெட்களுக்கு விவசாயிகள் மொத்தமாக விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். கிலோ ஸி20ல் இருந்து ஸி 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த செலவில் அதிகம் லாபம் தருவதாலும், மருத்துவ குணம் நிரம்பியதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிர் செய்கின்றனர்.

No comments:

Post a Comment