குளச்சல் அருகே மாயமான 2 மீனவர்களை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனியை சேர்ந்தவர்கள் மரியடேவிட்(36), எடிசன்(34). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் பைபர் வள்ளத்தில் கடலில் மீன்பிடிக்க
சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இருவரும் நேற்று மாலை ஆகியும் கரை திரும்ப வில்லை. இதனால் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 25 வள்ளங்களில் சென்று மயமான இருவரையும் தேடினர். இன்று 2வது நாளாக தேடும் பணி நடக்கிறது. ஆனால் மாயமான மீனவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது. போலீசார் தூத்துக்குடி, மற்றும் கேரள மாநிலம் விழிஞ்ஞம் ஆகிய பகுதியில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாயமான மீனவர் மரிய டேவிட்டின் மனைவி பிரமிளா, இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். எடிசன் மனைவி ஷீபா இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணியை முடுக்கிவிட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடிக்கச் சென்று 3 நாளாகியும் அவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
No comments:
Post a Comment