Wednesday, 23 May 2012

“விவசாய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது."

agriculture-universities-colleges-in-Indiaகோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, வேலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, மதுரை, தேனி, நெல்லை மாவட்டங்களில் 12 இடங்களில் விவசாய கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி (விவசாயம், தோட்டக்கலை, வனவியல், மனையியல், பட்டு வளர்ப்பு), பி.டெக் (பயோ டெக்னாலஜி, தோட்டக்கலை, பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரி இன்பர்மேசன் டெக்னாலஜி, வேளாண்மை பொறியியல், உணவு பதப்படுத்தல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பிஎஸ் (அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்) என 13 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய கல்லூரிகளிலும் கடந்த 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6 ஆகும்.
நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விவசாய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வில் உயிரியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பெரும்பாலானோரின் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. இதனால் மருத்துவம், பொறியியல் ‘கட்ஆப்‘ மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், மருத்துவம், பொறியியலுக்கு அடுத்து, மாணவர்கள் கவனம் விவசாய படிப்பில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, விவசாய படிப்புகளுக்கான விண்ணப்பம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனையானது. மே 7 முதல் நேற்று வரை மாநில அளவில் சுமார் 7 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் விற்றுள்ளன.
மதுரை விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வைரவன் கூறுகையில், “விவசாய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. விவசாயம் படித்தவர்கள் பலர் ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாநில அளவில் சுமார் 15 ஆயிரம் விண்ணப்பம் விற்பனையாகும் வாய்ப்புள்ளது” என்றார்.

No comments:

Post a Comment