சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.
தங்களுக்கு வாழ தகுதியான இடத்தை தெளிவாக தேர்வு செய்து சிறுக சிறுக பொருள் சேமித்து துல்லியமாக தனக்கும் குஞ்சுகளுக்கும் ஏற்ற அனைத்து வசதிகளுடன் அவை தங்கள் வாழ்விடங்களை அமைக்கும் விதம் புதிரானது.
இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.