Thursday 26 April 2012

மனைவிக்காக ரூ.9,50,000 கொடுத்து பேன்சி நம்பர் வாங்கிய முன்னாள் டிஜிபி

ருச்சிகா மானபங்க வழக்கில் சிக்கிய அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய புதிய மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு, 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.

Police_ex_DGP_rathoreஅரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.

மனைவிக்கு வாங்கிய ஆடம்பர காருக்கு ரூ. 9 லட்சத்துக்கு பேன்சி நம்பரை ஏலம் எடுத்த முன்னாள் டிஜிபி அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் தொல்லையால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ரத்தோர் கடந்த 2010, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 மாத சிறை தண்டனை அனுபவித்த அவருக்கு, 2010 நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், இப்போது அவர் வெளியே இருக்கிறார்.

இந்நிலையில், தனது மனைவிக்காக ஆடம்பரமான புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரை ரத்தோர் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். இந்த காருக்கு, "சிபி 01 கேவி 0001" என்ற பேன்சி நம்பரை வாங்குவதற்காக ரத்தோர் விண்ணப்பித்தார். இந்த எண்ணை அரியானா பதிவு மற்றும் லைசென்ஸ் ஆணையம் நேற்று ஏலம் விட்டது. இதில், 18 பேர் கலந்து கொண்டனர். இதில், மற்றவர்கள் கேட்ட தொகை விட ரத்தோர் ஒரு ரூபாய் அதிகம் கேட்டு, ஏலத்தை ஏற்றிக் கொண்டே சென்றார். இதுபோல், 4 முறை ஏலம் கேட்டார். இதனால், ஏலத்தில் இருந்து மற்றவர்கள் கழன்று கொண்டனர். இறுதியில், 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய்க்கு எந்த எண்ணை ரத்தோர் ஏலம் எடுத்தார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில், “நான் கடினமான நேரங்களை சந்தித்த போது என் மனைவி உறுதுணையாக இருந்தார். அவர் எப்போதுமே நம்பர் ஒன். அதனால்தான், இந்த நம்பர் ஒன் பேன்சி நம்பரை அவருக்காக வாங்கினேன்” என்றார்.

No comments:

Post a Comment