சிவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடேக் படிக்காமால், மிக தெளிவாய் திட்டமிட்டு கட்டப்படும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் எப்போதும் அதிசயமே.
தங்களுக்கு வாழ தகுதியான இடத்தை தெளிவாக தேர்வு செய்து சிறுக சிறுக பொருள் சேமித்து துல்லியமாக தனக்கும் குஞ்சுகளுக்கும் ஏற்ற அனைத்து வசதிகளுடன் அவை தங்கள் வாழ்விடங்களை அமைக்கும் விதம் புதிரானது.
இன்றும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட செயற்கையாக ஒரு கூட்டை நூறு விழுக்காடு துல்லியமாக யாராலும் அமைக்க முடியவில்லை.
தூக்கணாம் குருவி கூடு இன்னும் அலாதியான அதிசயம்.நிரந்தர இருப்பிடமெனில் அபார்ட்மென்ட் போல பிரமாண்டமாய் கூட்டாமாக பல பறவைகள் இணைந்து கூடு கட்டும். ஒரு வீட்டிற்க்கு ஒன்றிற்கு மேல் வாயில் இருக்கும். இந்த கூடுகளில் பல பாம்புகள் இருக்கும் அளவு பெரிதாக இருக்கும். தற்காலிக வாழ்விடம் எனில் சிறிய கூடு கட்டும் தனி குடும்பங்களாக கூடுகள் காட்டப்படும்.
இந்த கூடுகள் வேகமான காற்று வீசுதலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கபட்டிருக்கும்.
அதிக அளவில் தென்பட்ட இந்த கூடுகள் தற்போது எங்கள் ஊரில் ஒன்று கூட தென்படவில்லை என்பது வருத்தமான செய்தி
No comments:
Post a Comment