Sunday, 29 April 2012

குறும்பனையில் படமாக்கப்பட்ட செம்பட்டையில் கார்த்திகாவின் அக்கா

Sempattai_Kurumpanaiஜி.எஸ்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படம், "செம்பட்டை". இதில் "கோ" கார்த்திகாவின் சித்தி மகள் கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோ எம்.பாலா. பாசில் மற்றும் சித்திக்கின் உதவியாளர் ஐ.கணேஷ் இயக்குகிறார். மீனவர்களின் சகோதர பாசத்துடன் காதலை சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தம்பியால் ஏற்படும் பிரச்னைகளை அண்ணன் எவ்வாறு தீர்க்கிறார் என்பது திரைக்கதை.
படத்தில் நடித்தது பற்றி ஹீரோயின் கவுரி நம்பியார் கூறியதாவது: நடிகை ராதா எனது பெரியம்மா. அவரது கணவர் ராஜசேகரும், எனது தந்தை ராஜ விக்ரமனும் உடன் பிறந்தவர்கள். நான் மும்பையில் படித்தேன். இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறேன்.
ஏற்கனவே என் தங்கை கார்த்திகா நடிக்க ஆரம்பித்து விட்டாள். அவள் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாள். நாங்கள் இருவரும் அம்பிகா& ராதா போல, கார்த்திகா&கவுரி ஜோடியாக வலம் வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. (தினகரன்)

No comments:

Post a Comment