நம் தலைமுறையில் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் பட்டை சோறு உண்பது எவர்சில்வர் பாத்திரம்கள் அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது.
தோட்ட வேலை செய்வோருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும். பாத்திரம்கள் அதிக எண்ணிகையில் இருக்காது அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி குழி ஏற்படுத்தி தும்பு பகுதி அதே ஓலையால் கட்டப்படும் இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள் சுற்றுலா செல்வோரும் கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும் இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்.
இதில் சாப்பிடும்போது ஓலையின் மணமும் இணைந்து ஒரு திகட்டாத புது சுவையை தரும் அதிக உணவு சாப்பிட தோன்றும்
பிச்சைகாரர்கள் கூட முன்பு பட்டையோடு உணவு கேட்டு வருவது இன்னும் நினைவிருக்கிறது.
இன்றும் எங்கள் பகுதிகளில் சிறப்பு நிகழ்வுகளில் சில இடம்களில் பாயாசம் (குருத்தோலை திருநாள் ), கஞ்சி (புனித வெள்ளி ) பட்டையில் வழங்கபடுகிறது
hai prabu very nice
ReplyDeleteஇன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்....
ReplyDelete