Sunday 29 April 2012

380 கோல் மீன் : ஒரு நாள் தொழில் 1 கோடி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். இவர் தனது சகோதரர் ஹரூன் பாயுடன் சேர்ந்து கடந்த வாரம் கட்ச் பகுதியில் ஜக்கு எனுமிடத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கடல் தங்கம் என்று அழைக்கப்படும் 380 கோல் மீன் கிடைத்தது. இந்த கோல் பிஷ் ஒன்று 50 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ 450 முதல் 600 வரை விற்கப்படுகிறது.
ghol_fishஒலி எழுப்பும் தன்மை கொண்டு கோல் மீனுக்கு சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. கோல் மீன் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோல் மீனின் துடுப்பு பகுதி மருத்துவ துறையில் தையல் போடும் நூலிழை தயாரிக்க பயன்படுகிறது. இது மதுபானம் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீனவர் ஹசன் வாகர், அதிகப்படியான கோல் மீனை பிடித்து வந்ததால் கோடீஸ்வரராக திரும்பி உள்ளார். அவர் பிடித்த 380 கோல் மீன்களும் மொத்தம் ரூ 80 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தன்னிடம் உள்ள சாதாரண வகை படகை மாற்றி விட்டு, பெரிய படகு வாங்க முடிவு செய்துள்ளார்.
இதுபற்றி ஹசன் வாகர் கூறுகையில், “மீன்பிடி சீசன் அடுத்த மாதம் 14ம் தேதிக்கு மேல்தான் தொடங்க உள்ளது. இதற்கிடையே, ஏராளமான கோல் மீன் கிடைத்ததன் மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது எனது வாழ்க்கையை மாற்றி விட்டது” என்றார்.

No comments:

Post a Comment