Thursday, 19 January 2012

சீனாவின் ரோல் மாடல் : குப்பை சேகரிக்கும் 58 வயது மூதாட்டி

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.

குமரியில் குளங்கள் தூர்வாருதல் குழு

குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வாருதல் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு டி.ஆர்.ஓ. தலைமையில் குளங்கள் தூர்வாருதல் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. இடம் பெற்றுள்ளார்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி : தமிழகம் & ராஜஸ்தான் பலப்பரீட்சை

நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழக அணி மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்

வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.

ரயில்களில் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிக்கெட் முறைகேடுகளை தடுக்க, ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற புதிய சட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் நேற்று கூறியதாவது:

பொங்கல் சிறப்பு பஸ்கள் : அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ 24 கோடி வருமானம்

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு ரூ 23.66கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கலையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மட்டும் 3000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

பொங்கல் : 276 கோடிக்கு மதுபானம் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ் மாக் கடைகளில் ரூ 276 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.பொங்கல் பண்டி கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விற்பனையானதை விட, இந்த ஆண்டு மதுபானங்கள் ரூ 35 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.