Thursday, 19 January 2012

பொங்கல் சிறப்பு பஸ்கள் : அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ 24 கோடி வருமானம்

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு ரூ 23.66கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கலையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மட்டும் 3000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
அரசு விரைவு போக்கு வரத்து கழகம் 100 பஸ்களும், விழுப்புரம் போக்குவரத்து கழகம் 480 பஸ்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகம் 450 பஸ்களும், நெல்லை, மதுரை, கோவை, சேலம் போக்குவரத்து கழகங்கள் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களையும் இயக்கியது.
இது குறித்து போக்கு வரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
விரைவு போக்குவ ரத்து கழகத்துக்கு கடந்த 12 முதல் 15ம் தேதி வரையில் ரூ 5.02 கோடி வசூலாகியுள்ளது. 15ம் தேதி மட்டும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு ரூ 8 கோடி வசூலாகியுள்ளது.
கும்பகோணம் போக்கு வரத்து கழகத்துக்கு ரூ 6 கோடியே 49 லட்சம் வசூலாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்துக்கு காணும் பொங்கல் அன்று மட்டுமே ரூ 3.30 கோடியும், நெல்லை போக்குவரத்து கழகத்துக்கு ரூ 85 லட்சமும் வசூலாகியுள்ளது. மொத்தம் ரூ 23.66 கோடி வருமானம் கிடைத்துள் ளது.
இதுவே, கடந்த ஆண் டில் ரூ 10.2 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
எம்.டி.சிக்கு ஒரே நாளில் ரூ 3.30 கோடி
காணும் பொங்கலன்று மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா மையங்களுக்கு 250க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அன்று மட்டும் மொத்தமாக ரூ 3 கோடியே 30 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு வசூல் ரூ 2.27 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment