Thursday, 19 January 2012

தமிழ் நாடு : 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவு நீடிக்கும்

வளி மண்டல மேல் அடுக்கில் மேகங்கள் ஏதும் இன்றி வானம் தெளிவாக காணப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கடுமையாக பனி பெய்யும். வட திசையில் இருந்து குளிர்காற்று வீசுவதை அடுத்து தமிழகத்தில் குளிர் காற்றும், மூடுபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக காலையில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. மலைப் பிரதேசங்களில் உறைபனியாகவும் இருந்தது. இதற்கு காரணம் வெப்ப நிலை குறைவாக இருப்பதுதான்.
"இன்றும் நாளையும் இதே போல குறைந்த அளவு வெப்ப நிலை நிலவும். நீலகிரி மலையை ஒட்டிய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கடுமையான குளிர் காற்று வீசும். நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்சமாக சென்னையில் 18 டிகிரியும், கொல்கத்தா 18, மும்பை 19.5, டெல்லியில் 5.6 டிகிரியும் வெப்ப நிலை காணப்பட்டது."
பகலில் வெயில் நிலவும் போது அந்த வெப்பத்தை பூமி வாங்கிக் கொள்ளும். பின்னர் இரவில் அந்த வெப்பத்தை பூமி வளிவிடும். அந்த வெப்பமானது மேலெழும்பி மேகத்தில் மோதி திரும்பவும் பூமிக்கு வரும். இந்த நேரத்தில் கடல்பகுதியில் இருந்து காற்று அடிக்கும் போது அந்த காற்றுடன் வெப்பமும் கலந்து வெப்ப காற்று பரவும். அப்படி அல்லாமல் இரவில் வெப்பம் மேலெழுந்து செல்லும் போது வானத்தில் மேகம் இல்லாமல் இருந்தால் அந்த வெப்பம் வான் வெளிக்கு சென்று விடும். அப்படி சென்று விட்டால் பூமிகுளிர்ந்துவிடும். அப்போது பூமியில் கடுமையான குளிர் நிலவும். இப்படி வெப்ப நிலை குறைந்தால் அது பனியாக மாறும்.
தற்போது வட மாநிலங்களில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. நேற்று வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி கடுமையான குளிர் காற்று வீசியதால் இந்தியாவின் தென் பகுதியிலும் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் வானம் தெளிவாக காணப்பட்டதால், இரண்டு நாளைக்கு தமிழகத்தில் மூடுபனி நிலவும்.
நேற்று தமிழகத்தில் திருப்பத்தூர் 11 டிகிரி, புதுச்சேரி 18, கோவை 14, திருநெல்வேலி, தூத்துக்குடி,, பாளையங்கோட்டை 18, மதுரை 16, கன்னியாகுமரி 21, ஊட்டி 5.4, குன்னூர் 9, கொடைக்கானல் 8, வால்பாறை 6, சென்னை 18 டிகிரி வெப்பநிலை காணப்பட்டது. இன்றும் நாளையும் இதே போல குறைந்த அளவு வெப்ப நிலைநிலவும். நீலகிரி மலையை ஒட்டிய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கடுமையான குளிர் காற்று வீசும். நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்சமாக சென்னையில் 18 டிகிரியும், கொல்கத்தா 18, மும்பை 19.5, டெல்லியில் 5.6 டிகிரியும் வெப்ப நிலை காணப்பட்டது.

No comments:

Post a Comment