பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ் மாக் கடைகளில் ரூ 276 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.பொங்கல் பண்டி கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விற்பனையானதை விட, இந்த ஆண்டு மதுபானங்கள் ரூ 35 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 14ம் தேதி போகி பண்டிகையின்போது ரூ 62 கோடியும், 15ம் தேதி பொங்கல் அன்று ரூ 99 கோடியும், 17ம் தேதி காணும் பொங்கல் அன்று ரூ 80 கோடி மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இதில் பீர் 3 லட்சம் பாக்ஸ்களும், மதுபானங்கள் 6 லட்சத்து 50 ஆயிரம் பாக்ஸ்களும் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி போகி பண்டிகையின் போது ரூ 76 கோடிக்கும், 15ம் தேதி பொங்கல் அன்று ரூ 108 கோடிக்கும், 17ம் தேதி காணும் பொங்கல் அன்று ரூ 92 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
இதில் பீர் 3 லட்சத்து 10 ஆயிரம் பாக்ஸ்களும், மதுபாட்டில்கள் 7 லட்சத்து 10 ஆயிரம் பாக்ஸ்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment