Thursday 3 May 2012

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை : உறவினர்கள் மகிழ்ச்சி

சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அஞ்சல் துறையின் புதிய அவதாரம் "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா"

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை, விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அது, "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது.
Post_office_Indiaவங்கி சேவை எட்டியு ள்ள மக்கள் எண்ணிக்கை 50 சதவீதத்துக் குள் நீடிக்கிறது. ஏனெனில், வங்கிகள் வர்த்தக நோக்கில் மாநகரம், நகரங்களில் மட்டுமே கிளை அமைத்து கவனம் செலுத்துகின்றன. இதனால், பின்தங்கிய, கிராம மக்களுக்கு இன்னும் வங்கி சேவை எட்டவில்லை.

தகவல் ஆணையம் தீர்ப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி : உதயகுமார்

கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு ஆய்வறிக்கை வெளியிட தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
Dianuke_Udayakumar_Koodankulamகூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் உதயகுமார், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை&1 மற்றும் 2ன் பாதுகாப்பு ஆய்வறிக்கை, களஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை ஆகியவற்றை வெளியிடும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22-ம் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி நேற்று அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந் தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவியர் எழு தினர். தமிழகம், புதுச்சேரி யில் பள்ளி மாணவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
+2_results_onlineஇதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தற்போது, "டம்மி எண்கள்" மாற்றப்பட்டு மாணவர்களின் உரிய எண்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கும்பணி நடக்கிறது. மேலும், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன.