நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வியாபித்துள்ள தபால் துறை, விரைவில் வங்கியாக புதிய அவதாரம் எடுக்கப் போகிறது. ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று அது, "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" என்ற பெயரில் வங்கி சேவை தொடங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதில் இறங்கியுள்ளது.
வங்கி சேவை எட்டியு ள்ள மக்கள் எண்ணிக்கை 50 சதவீதத்துக் குள் நீடிக்கிறது. ஏனெனில், வங்கிகள் வர்த்தக நோக்கில் மாநகரம், நகரங்களில் மட்டுமே கிளை அமைத்து கவனம் செலுத்துகின்றன. இதனால், பின்தங்கிய, கிராம மக்களுக்கு இன்னும் வங்கி சேவை எட்டவில்லை.
இந்த நிலையில், கிராமங் களில் அதிகம் ஊடுருவியு ள்ள தபால் நிலையங்களில் வங்கி சேவையை அறிமுகம் செய்ய தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டது. அதற் கான வழிமுறைகள் பற்றி தபால் துறை சார்பில் நாடு முழுவதும் முதல் கட்ட ஆய்வு நடந்து முடிந்துள்ளது.
ஏற்கனவே அஞ்சல் சேவையுடன் சேமிப்பு கண க்கு, மாத சேமிப்பு, பிபிஎப், கிசான் விகாஸ் பத்திரம் என வங்கி சேவைகளை தபால் துறை ஏற்கனவே அளித்து வருகிறது. அத்துடன் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பொருட்கள் விற்பனை, இன்சூரன்ஸ் ஏஜென்சி என களமிறங்கியு ள்ளது.
எனவே, வங்கிகளை போல முழுமையான வங்கி சேவைகளை தபால் துறை தொடங்கினால் நாடு முழுவதும் மக்கள் வங்கி நடவடிக்கைகளை எளிதில் பெற முடியும் என்பதால், அனுமதி அளிக்க ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி துறை யும் ஆர்வம் தெரிவித்தன.
இதற்கான முறையான அனுமதியை மத்திய அமைச்சரவை, ரிசர்வ் வங்கியிடம் பெற தொலைத் தொடர்பு துறை விருப்பம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு அனுமதி கிடைத்ததும் "போஸ்ட் பாங்க் ஆப் இந்தியா" (PBI) என்ற பெயரில் வங்கி சேவையில் தபால் துறை இறங்கும். இதற்கான ஆலோசனை அளிக்க சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்வதில் தபால் துறை ஈடுபட்டுள்ளது.
** நாடு முழுவதும் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன.
** தபால் நிலையங்களில் 25 கோடி டெபாசிட் கணக்குகள் இருக்கின்றன.
** இந்தியாவின் வர்த்தக வங்கிகள் எண்ணிக்கை 171
** மொத்தம் 93,080 வங்கி கிளைகளில் 36 சதவீதம் மட்டுமே சிறுநகரங்கள், கிராமங்களில் உள்ளன.
No comments:
Post a Comment