Monday, 19 December 2011

கருங்கல் : ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ.வை தாக்கியதாக 10 பேர் மீது வழக்கு

போலீஸ் நிலையம் முன் அதிரடிப்படை குவிப்பு
கருங்கல் அருகே ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜாண் ஜேக்கப் நேற்று (18-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் பூட்டேற்றி கல்லடை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை பார்க்க சென்றார்.
அப்போது ஒரு கும்பல் ஜாண்ஜேக்கப் எம்எல்ஏவை நடுரோட்டில் வழிமறித்து தாக்கியது. பொதுமக்கள் எம்எல்ஏவை மீட்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பூட்டேற்றி கல்லடை பகுதியை சேர்ந்த விஜிகுமார், சிவகுமார், கண்ணன் உள்பட 10 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எம்எல்ஏ ஆதரவாளர்கள் திருப்பி தாக்கியது தொடர்பான புகாரின் பேரில் சரல்விளையை சேர்ந்த குமார், ராஜேஷ் குமார், ஸ்டீபன், சேகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். காங்கிரசை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதும் எம்.எல்.ஏ.க்கள் ஜாண் ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் ஏராளமான காங்கிரசார் கருங்கல் காவல் நிலையத்துக்கு வந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தக்கலை டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் அதிரடிப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். கைதான ஜாண் ஜேக்கப் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் நால்வரும் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே இன்று காலையில் விஜுகுமார், சுகுமார், கண்ணன் உள்பட 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி மீண்டும் கருங்கல் போலீஸ் நிலையத்தில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப் தலைமையில் காங்கிரசார் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தக்கலை டிஎஸ்பி சுந்தர்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி 7 பேரையும் கைது செய்யப்போவதாக தெரிவித்தார். அதன்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இளைஞர்காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், பாராளுமன்ற தலைவர் குமார், ஜேக்கப்சதா, ரமேஷ்குமார், பினுலால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவங்களால் கருங்கல் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

புதுக்கடை அருகே ருசிகர மோதல் : கணவரின் சொத்துக்காக 2 மனைவிகள் மோதல்

ஒருவருக்கு கத்திக்குத்து & அரிவாள் வெட்டு, மற்றொரு மனைவி கைது
புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருக்கு ராமலட்சுமி(42), யசோதா(47) என இரண்டு மனைவிகள் உண்டு. செல்லப்பன் கடந்த ஆண்டு இறந்தார். அதன் பின் இரு மனைவிகளின் குடும்பங்களுக்கு இடையே சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ராமலட்சுமி தான் குடியிருக்கும் வீட்டை தனக்கு தரவேண்டும் என யசோதா தரப்பினரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த யசோதா அவரது உறவினர்கள் சசிகலா(27), செல்வராஜ், ரமேஷ், பால்மணி ஆகியோர் நேற்று ராமலட்சுமி வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கினர். இதில் ராமலட்சுமியின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமலட்சுமி மகன் கதிரவன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து யசோதாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் சரக்கை தெருத்தெருவாக விற்றனர் : 3 பேர் கைது

பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் சரக்குகளை தெருதெருவாக அதிக விலைக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் டாஸ்மாக் கடை மதுபானங்கள் பிளாக்கில் விற்கப்படுகின்றன. சிலர் தெருத்தெருவாக சென்று அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொன்னேரி டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போலீசாருடன் சென்று இரு கிராமங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். நத்த தெருவில் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்டாலின் (40), செஞ்சிகான் (42), வெங்கடேசன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 324 குவார்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

2009-ல் நடந்த தேர்தலுக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை : ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சட்டசபை தொகுதிக்கு கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கோர்ட் உத்தரவுப்படி இன்று மீண்டும் எண்ணப்பட்டன.
ஜார்கண்ட் சட்டசபைக்கு கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தது. ஹட்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சரன்நாத் ஷாதியோ வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ராம்ஜிலால் ஷார்தாவை விட 25 வாக்குகளே கூடுதலாக பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தை காட்டி மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடுமாறு ராம்ஜிலால் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தார். இதனை ஆணையம் நிராகரித்து விட்டது.
ராம்ஜிலால் ராஞ்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக ராஞ்சி பழைய சிறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள், பந்தரா பஜார் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 16 சுற்றுகளாக வாக்கு எண்ணப் பட்டது.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் டிவி திரையில் காண்பிக்கப்பட்டது. வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். யார் வெற்றி பெற்றார் என்பதை கோர்ட் முடிவு செய்யும்.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் சரன் நாத் ஷாதியோ கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவர் வெற்றி பெற்றதாக ஐகோர்ட் அறிவித்தால் இங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

A clerk in MP owns property worth Rs 40 crores


A clerk in Madhya Pradesh has been accused of amassing assets disproportionate to his income. The police reportedly seized property papers worth Rs 40 crore from his residence.
The clerk works at the regional transport office in Indore.
Acting on a tip-off, EOW officials raided three residences of the clerk identified as Ramendra (Raman) Dhuldhoi and recovered details of properties worth over Rs 40 crore which is "hugely disproportionate to his known sources of income", police said.
Dhuldhoi, who is posted here in the Regional Transport Office (RTO), owns 49 bigha land at different places, four plots, a huge bungalow, another house and a hotel, Superintendent of Police Manoj Singh said.
Besides, gold ornaments weighing over one kilogram and silver jewels totaling 4.5 kg were also recovered. He has made substantial investments in life insurance policies, has five bank accounts and owns four costly vehicles and two two-wheelers, he said.
The clerk joined the government service in 1996 and presently his monthly salary is Rs 16,000, he said.
Process is on to value his properties and take stock of his bank accounts, the SP said, adding a case has been registered against him under Prevention of Corruption Act in this regard.

நள்ளிரவில் நடக்கும் பைக் ரேஸ் : சென்னை : வைரஸ் போல் பரவி விட்டது

வயது வாரியாக நான்கு விதங்களில் நடக்கிறது. : கடும் தண்டனை இல்லை
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு விடுமுறை நாள் என்றாலே கூட்டம் அலைமோதும். நள்ளிரவு வரை குடும்பத்தோடு கடல் காற்றை வாங்கி கொண்டு ஜாலியாக பொழுதை பலர் கழித்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் 8 மணி தாண்டினாலே சீக்கிரம் வீடுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள். கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயந்து இப்படி செல்கிறார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறு. விடுமுறை நாட்களில் நள்ளிரவு நேரத்தில் நடக்கும் பைக் ரேஸை கண்டு பயந்துதான். கடற்கரையில் இருந்து வீட்டிற்கு சீக்கிரம் கிளம்பாமல் இருந்தால் அவ்வளவு தான் பைக் ரேஸ் ஆசாமிகளிடம் சிக்கிவிட வேண்டியது தான்.
சென்னையில் ‘பைக் ரேஸ்’ என்ற கலாசாரம் வைரஸ் போல பரவிவிட்டது. மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணா சாலை, 100 அடி ரோடு, சென்னை & பெங்களூர் நெடுஞ்சாலை உள்பட சென்னையில் முக்கிய பெரிய சாலைகளில் பைக் ரேஸ் விடுமுறை நாட்கள் இரவு நேரங்களில் நடக்கிறது. ‘பைக் ரேஸ்’ சென்னையில் 4 விதங்களில் நடக்கிறது.
அதில், முதலில் ‘15 வயது பசங்க’ பைக் ரேஸ். இவர்கள் பைக்கை ஓட்டி பழகியவுடன் யாரையாவது முந்தி செல்வது என்ற ஆசை தோன்றி விடுகிறது. சென்னையில் இவர்கள் பலர் பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளிலோ, அல்லது பீச்சில் சர்வீஸ் ரோட்டிலோ வீடுகளில் ஏதாவது காரணங்களை சொல்லி பைக் எடுத்து வந்து சக நண்பர்களுடன் சிறிய அளவிலான ரேஸில் ஈடுபடுகின்றனர். சென்னையில் ஏதாவது தெருக்களில் இது போன்ற காட்சிகளை காண முடிகிறது. இந்த சிறிய ரேஸில் ஜெயிப்பவர்கள் தான் ஏரியாவுக்கு ‘மாஸ்டர் ஹூரோ’வாம். இங்கு இருந்து தான் பிறக்கிறது பைக் ரேஸ்.
அடுத்தது பணத்திற்காக நடக்கும் பைக் ரேஸ். இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல தரப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. விடுமுறை நாட்களில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் உள்பட பல முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடக்கிறது. சில கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரையை ரேஸின் பெவிலியனாக வைத்து உள்ளனர். நள்ளிரவு நேரங்களில் இங்கு வரும் பைக் ரேஸ் பார்ட்டிகள் 3 குரூப்களாக பிரிந்து கொள்கிறார்கள். பந்தய தொகையை பற்றி முடிவு செய்து விட்டு ஒரு குரூப் காந்தி சிலையில் இருந்து ராயபுரம் வரைக்கும், மற்றொரு குரூப் பெசன்ட் நகர் வரைக்கும், 3 வது குரூப் திருவான்மியூர் வரைக்கும் ரேஸில் ஈடுபடுகிறார்கள்.
இதில் கட்டப்படும் பந்தய தொகை ரூ 5 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை. பணத்திற்காக நடத்தும் இந்த ரேஸ் தான் சென்னையில் பலரது உயிரை பறித்து உள்ளது. முன்பு எல்லாம் இரவு நேரங்களில் நடத்தி வந்த பைக் ரேஸ் தற்போது பகல் நேரங்களில் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் ரேஸை கண்டு நடந்து செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும்.
மூன்றாவதாக சில மெக்கானிக்குகளால் நடத்தப்படும் பைக் ரேஸ். இவர்கள் நடத்தும் பைக் ரேஸ் மிகவும் ஆபத்தானவை. சில மெக்கானிக்குகள் தங்கள் பைக்குகளை ரேஸில் ஈடுபடுத்துவதற்காக அதன் என்ஜினில் உள்ள சில பகுதிகளை மாற்றி விடுகிறார்கள். அதன் வேகத் திறனை அதிகரிப்பதற்காக புதுசா சிலவகை ஸ்பேர்பார்ட்டுகளை அதில் இணைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு விடுமுறை நாட்கள் என்றாலே குஷியாகி விடுவார்கள். அன்று இரவோ அல்லது அதிகாலையிலோ ரேஸூக்காக தயாரான பைக்குகளை கொண்டு வந்து சாகச ரேஸை நடத்துவார்கள். இவர்கள் ரேஸூக்காக அதிகம் பயன்படுத்துவது கிழக்கு கடற்கரை சாலையை தான். பந்தய தொகையை வசூலிப்பதற்காக ஒரு நடுவரை நியமித்து அவருக்கு சம்பளத் தொகையையும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பந்தயத் தொகை கட்டுவதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ரேஸ் முடிந்த பிறகு சிலர் பணத்தை கொடுக்காமல் தகராறு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்ததால் பணத்தை கொடுப்பதற்கு முன்பு ஒரு உறுதிமொழி பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ரேஸில் பங்கேற்க முடியும். மேலும் சில நேரங்களில் பந்தயத் தொகைக்கு பதில் பைக்கையே வைத்து ரேஸ் நடத்துகிறார்கள்.
நான்காவதாக, வசதி படைத்தவர்கள் நடத்தும் பைக் ரேஸ். இவர்கள் நகருக்குள் வரமாட்டார்கள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ரேஸை நடத்துகிறார்கள். பந்தயத் தொகையெல்லாம் இல்லாமல் ஒரு ஜாலிக்காக வெகு தொலைவில் வேகமாக சென்று வருவது இவர்களுக்கு ஒரு ஹாபியாக வைத்திருக்கின்றனர். ரேஸில் ஈடுபட பயன்படுத்தும் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ 8 லட்சம் இருக்கும். இது போன்ற ரேஸ்களும் சென்னையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வளவு வகைகள் கொண்ட பைக் ரேஸை சென்னையில் வாரந்தோறுமோ, தினந்தோறுமோ அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதை தடுக்க சென்னை போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் குறிப்பிடத்தக்க வகையில் சொல்லும்படியாக இல்லை. சமீபத்தில் நடந்த பைக் ரேஸ் கானாத்தூரில் 55 வயது முதியவர் உயிரை பறித்துவிட்டது. ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல, சாந்தோம் சர்ச் ரோட்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் முன்னாள் குடும்பத்துடன் சென்றவர் மீது மோதினார். இதில் தந்தைக்கும், 4 வயது குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் நடந்து சென்ற 5 பேர் மீது மோதியுள்ளார். சென்னையில் மாதத்திற்கு இது போன்ற சம்பவங்கள் ஒன்று அல்லது 2 நடந்து கொண்டு தான் இருக்கிறது.
துணை கமிஷனர் சிவக்குமார்
போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், "பைக் ரேஸ் ஒரு மைதானத்திற்குள் நடத்தினால் அது விளையாட்டு. பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் நடத்தினால் அது விபரீதம்." கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இதை உணராமல் ஜாலிக்காகவும், பணத்திற்காகவும் ரேஸில் ஈடுபட்டு உயிரை பணயம் வைக்கிறார்கள். இதை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீச்சில் எந்த சாலைகளில் எல்லாம் நடக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் மப்டியில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக நேரத்தை மப்டி போலீசார் பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிப்பதற்காக செலவு செய்கிறார்கள். மேலும் கடற்கரை சாலைகளில் 2 உதவி கமிஷனர் தலைமையில் 10 போலீசார் இரவில் இருந்து அதிகாலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். புத்தாண்டு நெருங்குவதையொட்டி, பைக் ரேஸ்கள் தீவிரமாகலாம் என்று தகவல் வருகிறது. அதனால் கூடுதல் கவனம் செல்லுத்தி பைக் ரேஸ் ஆசாமிகளை பிடிக்கும் வகைகளில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்� என்றார்.
‘வாக்கிங் செல்லவே பயமாக இருக்கிறது’
பீச் ரோட்டில் அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்பவர்கள் கூறுகையில், �முன்பெல்லாம் வாக்கிங் செல்வதற்கு ஆர்வமாக இருக்கும். ஆனால், தற்போது அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்லவே பயமாக உள்ளது. ஏனென்றால் காலையில் நடக்கும் பைக் ரேஸ்ஸால் தான். பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு உயிர் மீது பயமில்லை. ஆனால் எங்களுக்கு பயம் இருக்கிறது. பைக் ரேஸை முற்றிலும் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்� என்றனர்.
கடும் தண்டனை இல்லை
பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குழுவாக செல்வார்கள். ஆனால் சில ஆசாமிகள் பீச் ரோட்டில் உள்ள சிக்னல்களில் நிற்கும் இளைஞர்களிடம் சில "சிக்னல்களை" காட்டி ரேசுக்கு அழைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. "ஊர்... ஊர்..." பைக்கில் சத்தம் வரவழைத்து "ரேசுக்கு தயாரா?" என சிக்னல் காட்டி அழைப்பதாக போலீசார் தெரிவித்தனர். பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தி மரணம் நிகழ்ந்தால் போலீசார் ரேஸ் ஆசாமிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 279, 184, 304(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப் படும் பைக் ரேஸ் ஆசாமிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை, அல்லது
ரூ 1000 அபராதம் கட்ட வேண்டும். ரோட்டில் நடந்து செல்பவர்களை பைக் ரேஸ் ஆசாமிகள் மோதி ஏற்படும் உயிரிழப்புக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் அபராதம். ஒரு உயிரின் மதிப்பு வெறும் ஆயிரம் ரூபாய் தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.  (Dinakaran)

கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை

தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம்
தமிழகத்தில் முதன்முறையாக கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை செயல்படுத்தப் படவுள்ளது. இதையொட்டி முட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்திய அரசு நிறுவனமான கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்தின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தலைமை அலுவலகம் அமைத்து மீன் வளர்ப்பு சம்பந்தமான பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை தீட்டி நாடு முழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் பொழியூரில் மீன் குஞ்சு பொரிப்பகத்தில் உற்பத்தி செய்யப் பட்ட மோரா என்னும் கடல் விரால் மீன் குஞ்சுகளை கடலில் வலைக்கூண்டுகள் அமைத்து சோதனை அடிப்படையில் வளர்க்கும் திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் முட்டம் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை குறித்து மீனவர்களிடையே விளக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று முட்டம் ஜேப்பியார்ரெமிபாய் திருமணமண்டபத்தில் நடந்தது. 

ஒபாமா குழந்தைகள் பேஸ்புக் பயன்படுத்த தடை

இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் பயன்படுத்தக் கூடாது என்று தனது 2 பெண் குழந்தைகளுக்கும் அமெரி க்க அதிபர் ஒபாமா தடை விதித்துள்ளார்.
பேஸ்புக் உள்பட சமுக இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக் கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, கட ந்த 2008 தேர்தலின் போது, தனது பிரசாரத்திற்கு இந்த இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்தினார். அதிபரான பின்பு, முதலாவது "சோஷியல் மீடியா பிரசி டென்ட்" என்று பாராட்டு பெற்றார். அப்படிப் பட்டவர் இப்போது தனது 2 பெண் குழந்தைகளுக்கும் பேஸ்புக் பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஒபாமா & மிச்சேல் தம்பதிக்கு மாலியா(13), சாஷா(10) என 2 பெண் குழந்தைகள். இருவரும் மிகவும் சுட்டி. ஆனாலும், இருவரையும் கட்டுப் பாடாக வளர்க்கின் றனர் ஒபாமா தம்பதி.
குழந்தைகள் இருவரும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களை பயன் படுத்தக் கூடாது என்று ஒபாமா தடை விதித்து ள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘எங்களுக்கு யாரென்றே தெரியாத எத்தனையோ பேர் எங்கள் குடும்ப விவரங்களை அறி ந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை வெளியிடுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் அவர்கள் காத்திருக்கட்டும்’ என்றார்.

செக்ஸ் தொழிலாளர்களைவிட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு

செக்ஸ் தொழிலாளர்களை விட, ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுகுறித்து, மத்திய திட்ட கமிஷனால் அமைக்கப்பட்ட குழு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7.3 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள். நோயால் பாதித்த பெண் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4.94 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2000 ஆண்டில் மொத்தம் 2.7 லட்சம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11% பேர் பெண் செக்ஸ் தொழிலாளர்கள். அப்போது, நோய் பாதித்த ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருந்தது. பொதுவாக எய்ட்ஸ் நோயால் ஆண்கள் பாதிக்கப்படுவது குறைவாக உள்ள ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.
"செக்ஸ் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், நாட்டில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர்கள் உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது’ என இக்குழுவின் தலை வரும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை செயலாளருமான சயன் சட்டர்ஜி தெரிவித் தார். இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இப்பிரச்னையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது.

ரயிலில் டீ,பழம் விற்ற 28 பேருக்கு அபராதம் : சேலத்தில் அதிரடி

சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களில் அனுமதியின்றி டீ, பழம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை ஏராளமானோர் விற்பனை செய்து வருவதாக சென்னை ரயில்வே பாதுகாப்பு படை விஜிலென்ஸ் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் சென்னை பாதுகாப்பு படை போலீசார், பொக்காரோ எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம் பகுதியை சேர்ந்த எல்லம்மாள், கவிதா, மேனகா, சரஸ்வதி, சிந்து, கேசவன், தங்கராஜ், பாபு உள்ளிட்ட 28 பேர் சிக்கினர். இவர்கள் மீது டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது, அனுமதியின்றி ரயிலில் டீ, பழம் விற்றது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 28 பேருக்கும் தலா ரூ 700 வீதம் ரூ 19,600 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ரூ 100 கோடியில் சுற்றுலா பூங்கா : சென்னை, திருச்சியில் சிங்கப்பூர் போல

சிங்கப்பூரில் உள்ளது போல சென்னை, திருச்சியில் ரூ 100 கோடி செலவில் சென்டோசா பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் புதிய சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாத்துறைக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சியிலும் தலா ரூ 50 கோடியில் அமைக்கப்படும். கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகளை தன்னகத்தே கொண்ட கிராமங் கள் சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கப் படும்.
அதன்படி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள், மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்படும். கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்று), தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மிகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று). காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவை உருவாக்கப்படும்.
அவற்றை ரூ 450 கோடி செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்கட்டமாக, கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு, உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும், பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கப்படும்.
தமிழகத்தில் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களை யும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரோப் கார் திட் டம் செயல்படுத்தப்படும்.

பிரதமரை கண்டித்து 10 கி.மீ. நடைபயணம் : கூடங்குளம்

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை 10 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.
ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தை மத்திய அரசு நிறுவியது. இதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அணுமின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவித்ததையடுத்து மீண்டும் போராட்டம் வெடித்தது.
சுமார் 4 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மக்களின் அச்ச உணர்வை போக்காத வரையில் அணுமின்உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தீர்மானத்தை மீறி அணுமின்உற்பத்தி ஆயத்த பணிகளில் அணுமின்நிர்வாகம் ஈடுபட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், இரு வாரங்களில் முதல் இரு அணுஉலைகளும் 6 மாதங்களில் மேலும் இரு அணுஉலைகளும் உற்பத்தியை தொடங்கும் என பேட்டியளித்தார்.
இதனால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதம் பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, செட்டிவிளை, நெல்லை மாவட்டம் உவரி, இடிந்தகரை, கூடுதாழை, கூட்டப்பனை, பெருமணல், செட்டிகுளம், கூடங்குளம், வைராவிகிணறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இடிந்தகரை & கூடங்குளம் விலக்கில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் முன்பு கூடினர்.
அங்கு அவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் குழந்தைகளும், முதியவர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இளைஞர்கள், பெண்கள், "அணுஉலை உயிருக்கு உலை" என்ற வாசகங்கள் அடங்கிய கறுப்பு டீ ஷர்ட்டுகள் அணிந்திருந்தனர். கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியிருந்தனர். கூடங்குளம் அணுஉலையை உடனே மூடு என்று கோஷமிட்டவாறு நடந்தனர்.