தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம்
தமிழகத்தில் முதன்முறையாக கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்க்கும் முறை செயல்படுத்தப் படவுள்ளது. இதையொட்டி முட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்திய அரசு நிறுவனமான கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்தின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தலைமை அலுவலகம் அமைத்து மீன் வளர்ப்பு சம்பந்தமான பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை தீட்டி நாடு முழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் பொழியூரில் மீன் குஞ்சு பொரிப்பகத்தில் உற்பத்தி செய்யப் பட்ட மோரா என்னும் கடல் விரால் மீன் குஞ்சுகளை கடலில் வலைக்கூண்டுகள் அமைத்து சோதனை அடிப்படையில் வளர்க்கும் திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் முட்டம் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை குறித்து மீனவர்களிடையே விளக்கும் விழிப்புணர்வு முகாம் நேற்று முட்டம் ஜேப்பியார்ரெமிபாய் திருமணமண்டபத்தில் நடந்தது.
No comments:
Post a Comment