பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் சரக்குகளை தெருதெருவாக அதிக விலைக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் டாஸ்மாக் கடை மதுபானங்கள் பிளாக்கில் விற்கப்படுகின்றன. சிலர் தெருத்தெருவாக சென்று அதிக விலைக்கு மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொன்னேரி டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போலீசாருடன் சென்று இரு கிராமங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். நத்த தெருவில் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்டாலின் (40), செஞ்சிகான் (42), வெங்கடேசன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 324 குவார்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment