Monday 19 December 2011

ரயிலில் டீ,பழம் விற்ற 28 பேருக்கு அபராதம் : சேலத்தில் அதிரடி

சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக இயங்கும் ரயில்களில் அனுமதியின்றி டீ, பழம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை ஏராளமானோர் விற்பனை செய்து வருவதாக சென்னை ரயில்வே பாதுகாப்பு படை விஜிலென்ஸ் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் சென்னை பாதுகாப்பு படை போலீசார், பொக்காரோ எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம் பகுதியை சேர்ந்த எல்லம்மாள், கவிதா, மேனகா, சரஸ்வதி, சிந்து, கேசவன், தங்கராஜ், பாபு உள்ளிட்ட 28 பேர் சிக்கினர். இவர்கள் மீது டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது, அனுமதியின்றி ரயிலில் டீ, பழம் விற்றது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 28 பேருக்கும் தலா ரூ 700 வீதம் ரூ 19,600 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment