ஒருவருக்கு கத்திக்குத்து & அரிவாள் வெட்டு, மற்றொரு மனைவி கைது
புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவருக்கு ராமலட்சுமி(42), யசோதா(47) என இரண்டு மனைவிகள் உண்டு. செல்லப்பன் கடந்த ஆண்டு இறந்தார். அதன் பின் இரு மனைவிகளின் குடும்பங்களுக்கு இடையே சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ராமலட்சுமி தான் குடியிருக்கும் வீட்டை தனக்கு தரவேண்டும் என யசோதா தரப்பினரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த யசோதா அவரது உறவினர்கள் சசிகலா(27), செல்வராஜ், ரமேஷ், பால்மணி ஆகியோர் நேற்று ராமலட்சுமி வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கினர். இதில் ராமலட்சுமியின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமலட்சுமி மகன் கதிரவன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து யசோதாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment