பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதி நேற்று அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந் தது. இந்த தேர்வில் பள்ளிகள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவியர் எழு தினர். தமிழகம், புதுச்சேரி யில் பள்ளி மாணவர்கள் தவிர 61,319 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதினர்.
இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 50 மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் திருத்தும் பணிகள் முடிந்து தற்போது, "டம்மி எண்கள்" மாற்றப்பட்டு மாணவர்களின் உரிய எண்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கும்பணி நடக்கிறது. மேலும், போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன.
இந்த ஆண்டு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் போட்டோ, "பார் கோடு", மற்றும் 12 வகையான மறைமுக குறியீடுகள் இடம் பெறுகின்றன. அதனால் போலி மதிப்பெண் பட்டியல் தயாரிக்க முடியாது. மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடும் பணிகள் வரும் 20ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் போட்டோ, "பார் கோடு", மற்றும் 12 வகையான மறைமுக குறியீடுகள் இடம் பெறுகின்றன. அதனால் போலி மதிப்பெண் பட்டியல் தயாரிக்க முடியாது. மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடும் பணிகள் வரும் 20ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மதியம் நடந்தது.
அந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர், மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறியதாவது:
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான ஆய் வுக் கூட்டம் இன்று நடந் தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வரும் 22ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 22ம் தேதி காலை 10 மணி அளவில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment