Friday, 9 December 2011

சந்தனம், குங்குமம் கொடுத்து தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்கும் கேரள பஞ்., தலைவி

செங்கோட்டை எல்லையில் நெகிழ்ச்சி
முல்லை பெரியாறு பிரச்சனை யால் தமிழக&கேரள உறவு சீர் கெட்டு வரும் நிலையில் செங்கோ ட்டையை அடுத்த கேரள மாநி லம் ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி, உறுப் பினர்கள் தலை மையில் பொதுமக்கள் தமிழக ஐயப்ப பக்தர்களை வரவேற்று உபசரித்தது பக்தர்களை ஆனந்தமடைய வைத்தது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் தேனி, குமுளி, வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு மலையாளிகள் இடையூறு செய்து வருவதால் பக்தர்கள் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். ஆரியங்காவு பகுதியில் அவர்களுக்கு பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் தலைமையில் பூ மற்றும் சந்தனம் கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தமிழக கேரள மக்களிடையே பிரிவினையை உருவாக்கி வருகிறது. காலம் காலமாக சகோதர்களாக வா ழ்கிற நிலை தற்போது பகையாக மாறி வருவது குறித்தும் இரு மாநிலங்களிலும் உள்ள பெரிய வர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். தேனி, குமுளி, வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு கேரள மக்கள் இடையூறு செய்வதால் பக்தர் கள் செங்கோட்டை வழி யாக செல்கின்றனர். இதனால் இப் பகுதியில் ஐயப்ப பக்தர்க ளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரள மக்களின் நல்லெண்ண நடவடிக்கையாக ஆரியங்காவு பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூ, சந்தனம், குங் குமம், மற்றும் இனிப்பு வழங்கி கனிவோடு வரவேற்று சபரி மலை அனுப்பி வைக்கின்றனர்.
நேற்று ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி ஐயம்மாள், துணை தலைவர் சலீம், மற்றும் அப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை வர வேற்று உபசரித்து சபரிமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சி பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. அத்துடன் ஆரியங்காவு, தென் மலை பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பசி போ க்க கேரள மக்களால் அன்னதா னம் செய்யப்படுகிறது. இதில் கேரள மக்களின் பாரம்பரிய உணவான கப்பை கிழங்கு, கஞ்சி வழங்கப்பட்டது.
ஒரு சில கேரள அரசியல் வாதிகளால் தமிழக & கேரள உறவு பாதிக்கப்படும் நிலையில் ஆரியங்காவு பகுதி மக்களின் நல்லெண்ண உபசரிப்பு ஐயப்ப பக்தர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. (Tamil Murasu)

No comments:

Post a Comment