காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவனும், மாணவியும் ஊட்டியில் விஷம் குடித்தனர்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே புல்வெளியில் ஒரு இளம்பெண் ணும், வாலிபரும் படுத்து கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி மயக்கமடைந்து கிடந்தனர். ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நள்ளிரவு இருவருக்கும் மயக்கம் தெளிந்தது.
அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் மேலமங்கலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், கீழமுடிமானை சேர்ந்த 18 வயது இளம் பெண் என்பது தெரியவந்து. இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இது இருவரது பெற்றோருக்கும் தெரியவர ‘படிக்கிற வயசுல காதலா’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனமுடைந்த இருவரும், கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஊட்டி வந்தனர். இருவரையும் காணாமல் பெற்றோர் தவித்தனர். போலீசார் இவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், ஊட்டியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இருவரும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காதல் ஜோடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ் 2 காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட பக்கிகளா காதல்னா என்னப்பா???
முதல்ல நல்ல படுச்சு வேலைக்கு போ!!!! நல்லா புடுச்ச பொண்ண பாரு!!!!! கல்யாணம் பண்ணு!!!
அப்ப LOVE பண்ணு........ குழந்தை பொறக்கும்... LOVE .... LOVE ... LOVE ... பண்ணிகிட்டே இரு.. சாகும் வரைக்கும்...
இந்த LOVE எல்லாம் சூடு குறைஞ்சா காத்துல பறந்துடும் தம்பி....
அதுதாண்டா LOVE... காதல் ... எல்லாமே!!!
No comments:
Post a Comment