Saturday, 10 December 2011

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண் : அரசு டாக்டர்களின் அலட்சியம்

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர்.
இரண்டு நாள் ஆகியும் அங்கு காயத்ரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று, மருத்துவமனைக்கு வந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராமமூர்த்தியிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர்.
மருத்துவர்களின் அலட்சியத்தை பார்த்து கொதிப்படைந்த அவர், டீன் தேன்மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நேற்று இரவு 10 மணி அளவில், காயத்ரிக்கு ஆபரேஷன் செய்து, இறந்த குழந்தை அகற்றப்பட்டது.  (tamil murasu)

1 comment:

  1. Arasu athikaarikalin attakaasankal naalukku naal athikarikkirathu...ithan kaaranamaakathaan sila vipareethankal nadakkinrana...Thamilaka arasu kadumaiyana vuththaravu pirappiththaal nallathu...Oru vuyirai kaappaatra MLA vara vendiyullathu...nalla Thamilakam...MIKA NALLA ARASU...ATHUVUM ORU PURATCHI THALAIVIYIN ARASU

    ReplyDelete