நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தக மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என விளம்பரம் செய்தார். ரூ. 1 லட்சம் செலுத்தினால் மாதம் ரூ. 8 ஆயிரம் வரை கிடைக்கும் என கூறினார். இதை நம்பி அவரிடம் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். பங்குகள் விற்பனை ஏற்றம், இறக்கத்துக்கேற்ப மாதந்தோறும் அளிக்கப்படும் தொகை மாறுபடும் எனவும் கூறி இருந்தார்.
அதன் மூலம் சுமார் ரூ. 1.25 கோடி வரை அவர் முதலீட்டாளர்களிடம் வசூலித்துள்ளார். பணத்தை பெற்று கொண்டு ஒரு சில மாதங்கள் அவர் கூறியது போன்று பணம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் பணம் கொடுக்க வில்லை. பணம் கொடுத்தவர்கள் தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக ஏற்கனவே நேசமணிநகர் பகுதியில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பிடித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் டாலர், யூரோ போன்ற வெளிநாட்டு பணங்கள் மதிப்பு குறையும் போது என்னிடம் உள்ள ரூபாயை கொடுத்து அவற்றை வாங்கி வைத்து கொள்வேன். வெளிநாட்டு பணங்கள் மதிப்பு கூடும்போது, அதனை கொடுத்து நம் நாட்டு பணத்தை பெற்றுக் கொள்வேன். இதில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பலரிடமும் பணத்தை பெற்றேன். இதனை நம்பி பலரும் பணம் செலுத்தினர்.
ஆனால் அவர்களுக்கு என்னால் பணத்தை திரும்ப கொடுக்க முடிய வில்லை என்றார். அவரிடம் நடந்த விசாரணையில் மேலும் பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி தொகை இருப்பதால், இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. (தமிழ் முரசு)
சிந்திப்போம்
// இந்த நிலையில் நேற்று வெள்ளமடம் பகுதியில் , நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை அவரிடம் ஏமாந்த முதலீட்டாளர்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்தனர்.//
** மோசடி செய்ய அந்த வாலிபர் நினைத்திருந்தால் அவர் தலை மறைவாயிருக்கலாம் அல்லவா???
** பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய விதமாக யோசிதிருப்பரோ???
** திட்டம் தோற்றுவிட்டதால் தூற்ற பட்டாரோ.. ஜெயித்திருந்தால் மக்கள் அவரை பாராட்டி இருப்பார்களோ???
உண்மை வெல்லட்டும்... பணத்தை இழந்தவர்ளுக்கு பணம் கிடைக்கட்டும்... வாலிபர் மீண்டும் போராடட்டும்... மோசடி செய்ய நினைத்திருந்தால் தண்டிக்க பட வேண்டும்.
No comments:
Post a Comment