பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை (எலைட்) பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்கால் அணி முதலில் பந்து வீசியது. தமிழகம் முதல் இன்னிங்சில் 391 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. முகுந்த் 83, பத்ரிநாத் 24, வாசுதேவதாஸ் 106, கேப்டன் எல்.பாலாஜி 49* ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி, முதல் இன்னிங்சில் 176 ரன்னுக்கு சுருண்டது. சுக்லா அதிகபட்சமாக 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கங்குலி 28, சுக்லா 50 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கங்குலி 33, சுக்லா 73 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பெங்கால் அணி 2வது இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி பந்துவீச்சில் யோமகேஷ் 3, பாலாஜி 2, கவுஷிக், ஸ்ரீனிவாஸ், அபராஜித், முகுந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 32 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 4.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன் எடுத்து வென்றது. முகுந்த் 25, விஜய் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தன.
No comments:
Post a Comment