இந்திய தேசத்தின் தமிழ் நாடு மாநிலத்தின் குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அழகான மிக பெரிய கடலோர கிராமம் குறும்பனை.
சமிப காலமாக குறும்பனை கிராமம் சினிமா காரர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று கேட்டால் குறும்பனை கிராமத்தின் அழகும், மக்கள் தரும் ஆதரவும் என்கிறார்கள்.
அப்படி என்னதான் அழகு இந்த கிராமத்தில்... நீங்களே பாருங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்.
குறும்பனை கடற்கரை : மண் அரிப்பினால் நாங்கள் விளையாடிய பகுதி கடலால் ஆக்ரமிக்கபட்டுவிட்டது.
குறும்பனை கடற்கரை மற்றொரு பகுதி : சுற்றுலா தலம் அமைத்தல் என்ற பெயரில் அக்க்ரமிப்புகள்.
குறும்பனை கடற்கரை : இங்குதான் எங்கள் தாத்தா, அப்பா எல்லாரும் உடல் காயா கரமடி இழுத்தார்கள். அது ஒரு காலம்.
குறும்பனை கடற்கரை : என்னே அழகு!!!
குறும்பனை : புனித இன்னசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்.
குறும்பனை : புனித இன்னாசியார் ஆலய பீடம்.
"காமராசு (1998 )" : அப்போது நான் 11 -ம் வகுப்பு. ஊரில் படம் எடுக்கிறார்கள், முரளி, லைலா மற்றும் பட குழுவினர் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி. பரிட்சையை விட்டுவிட்டு படபிடிப்பு காண சென்றோம் (மறைகல்வி பரீட்சை என்பதால்). மற்றொரு சுவாரஸ்யம் எனது அண்ணா எனக்கு வங்கி கொடுத்த ரூ.50 பேனாவையும் தொலைத்தேன்.
"அலையோடு விளையாடு-2008" : படம் இன்னும் வெளிவரவில்லை
"குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - 2009 "
எனது அன்பு மகன் அமுதன்பு வுடன் "செம்பட்டை-2011" படபிடிப்பு இடத்தில்
"மூன்று பேர் மூன்று காதல் - 2011 " : தற்பொழுது இதன் படபிடிப்பு ஊரில் நடந்து கொண்டிருக்கிறது.
ஊரை சுற்றி வளர்ந்து நிற்கும் தென்னை, பனை மரங்களும், கோவில், பள்ளிக்கூடம், கடற்கரை, குருசடிகள், பாறைகள், வாய்க்கால் அத்தனையுமே அழகுதான். சொகுசு என கருதப்படும் நகர (நரக) வாழ்க்கை இதற்கு முன்னால் தூசுதான்.
குறும்பனை அழகான கிராமம்.
ReplyDelete