Wednesday, 14 December 2011

அப்பப்பா!!! ஒரு பால் உறவு : கோட்டாறு பகுதியில் : கணவன்களை உதறிவிட்டு ‘இணைந்து’ வாழ்ந்த பெண்கள்

நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் வசிக்கும் இரு பெண்கள் இடையே லெஸ்பியன் உறவு இருந்து வந்தது. கடந்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் பழக்கத்தை நீட்டித்து வந்தனர். அரசல், புரசலாக இருந்த இந்த விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. குடும்ப நலன் கருதி இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கிடையே இரண்டு பேரில் ஒரு பெண்ணின் கணவர் அவரை பிரிந்து சென்றார். மற்றொரு பெண்ணின் கணவன் தனது மனைவியை தகாத பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் இரு பெண்களையும் அழைத்து பேசி அறிவுரைகள் வழங்கினர். ஆனால் இந்த பழக்கத்தில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் மாயமானார்கள். பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
உறவினர்கள் சென்று இரு பெண்களையும் மீட்டனர். நேற்றிரவு அவர்களை கோட்டாறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் பல்வேறு அறிவுரைகளை கூறினர். இருப்பினும் இரு பெண்களையும் பிரிக்க முடியவில்லை.
எங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்வோம் என இருவரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து ஊர் பிரமுகர்களை அழைத்து பேசிய போலீசார் இரு பெண்களையும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவைத்தனர்.

No comments:

Post a Comment