தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி (40), இரண்டு நாய்க் குட்டி வளர்த்தார். வழக்கம்போல, நேற்றும் அவருக்கு அருகிலேயே நாய்க் குட்டிகள் படுத்து தூங்கின. நள்ளிரவு நேரத்தில் அசந்து தூங்கியபோது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. எஜமானரின் அருகில் பாம்பு செல்வதை பார்த்து குரைத்த ‘மகாலட்சுமி’ என்ற நாய்க் குட்டி, பாம்புடன் போராடி அதன் தலையை கடித்து குதறி கொன்றது. பாம்பு கொத்தி விஷம் ஏறியதில் நாய்க் குட்டியும் பரிதாபமாக இறந்தது. பாம்பை கவ்விய நிலையில் உயிர் விட்ட நாய்க் குட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பழனி. (Tamil Murasu)
No comments:
Post a Comment