Wednesday, 14 December 2011

முல்லைப் பெரியாறு அணை சிடி : பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தயாரித்தது

கேரள முகத்திரையை கிழிக்கும் : தமிழகம் முழுவதும் விநியோகம்.
முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்த குறும்பட சிடியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.



முல்லை பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் "டேம் 999" படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், கேரள அரசின் பொய் பிரசாரத்தை தோலுரித்து காட்டும் விதமாகவும் தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளனர். சிடியாக உருவாகியுள்ள இந்த குறும்படத்தை தமிழகம் முழுவதும் தமிழர் அமைப்புகள் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றுடன் துவங்கும் இந்த குறும்படத்தில், முல்லை பெரியாறு அணை பிரச்னையும், அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் முழு விளக்கம் எடுத்துரைக்கப்படுகிறது. பாலாறு, காவிரி தண்ணீரை ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்களால் தரமறுக்கப்படும் நிலையில் முழுக்க முழுக்க தமிழர்களுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை தண்ணீரையும் 142 அடியாக உயர்த்த விடாமல் கேரளா தடுத்து வருகிறது.
தற்போது உள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழ் 50 அடி பள்ளத்தில் புதிய அணையை கட்டுவதன் மூலம், தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவை குறைக்கலாம் என்றும், அத்துடன் இடுக்கி அணைக்கு கூடுதல் தண்ணீரை கொண்டு சென்று மின் உற்பத்தியை அதிகரிக்கலாம் என திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது என தெளிவாக வரைபடங்களுடன் எடுத்துரைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment