Saturday 14 January 2012

தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் : தென் மண்டலம்

தென் மண்டல அஞ்சல் துறையின் கீழ் உள்ள 733 தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த சேவையும் துரிதமாக நடைபெறும்.
தபால் பட்டுவாடா, பதிவு தபால் போக்குவரத்து, பார்சல் தபால் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, மணியார்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை செய்து வருகிறது.
இது தவிர இன்சூரன்ஸ், தங்கநாணய விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சேவை களையும் நிறைவேற்றி வருகிறது. அனைத்து வகையான சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக அளிக்கும் பொருட்டு, தபால் நிலையங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் அஞ்சல் துறை துவக்கியது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள தலைமை தபால்நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் கம்ப்யூட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி என 11 கோட்டங்கள், தென் மண்டல அஞ்சல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இவற்றில் 29 தலைமை தபால் நிலையங்களும், 733 தபால் நிலையங்களும் உள்ளன. இவற்றில் 389 தபால் நிலையங்களில் ஏற்கனவே கம்ப்யூட்டர்கள் உள்ளன. மீதமுள்ள 344 தபால் நிலையங்களில் கம்ப்யூட்டர்கள் பொருத்தும் பணி நடந்தது. தற்போது மொத்தம் உள்ள 733 தபால் நிலையங்களிலும் கம்ப்யூட்டர்கள் பொருத்தி ஒரு குடையின் கீழ் இணைக்கப்பட்டது.
இது குறித்து தென் மண்டல அஞ்சல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகள் அனைத்தும் டெல்லியில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. அனைத்து பணிகளும் முடிந்து, வெள்ளோட்டம் பார்க்கப் பட்டது. எந்த பிரச்னையும் இல்லாமல் மிகச்சிறப்பாக உள்ளது. கம்ப்யூட்டர் மயமானதால் அனைத்து சேவைகளும் விரைந்து செய்யப்படும். மணியார்டர் சேவை துரிதமாக நடக்கும். இதன்மூலம் 2ம் கட்ட நகர மக்கள் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

click here

No comments:

Post a Comment