Saturday, 14 January 2012

3 சிறுமிகளை காப்பாற்றிய தர்மபுரி மாணவனுக்கு தேசிய விருது

R. Sudhakar, Superintendent of Police, handing over a cash prize to G. Parameswaran
தர்மபுரி அருகே குளத்தில் தத்தளித்த மூன்று சிறுமிகளை காப்பாற்றிய 9ம் வகுப்பு மாணவனுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இதை பிரதமர் வழங்குகிறார்.
தர்மபுரி மாவட்டம் அரகாசனஅள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரமேஸ்வரன்(14). இவர் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18.09.2010 அன்று நாகாவதி அணையின் கால்வாயில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.
அப்போது, அருகேயுள்ள குட்டையின் கரையோரத்தில் பள்ளி மாணவிகள் உமா, பூஜா, சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென தண்ணீரில் தவறி விழுந்து, தத்தளித்தனர்.
பரமேஸ்வரன் நீச்சல் அறிந்திருக்கவில்லை, எனினும் தனது உயிரை துச்சம் என மதித்து உயிருக்கு போராடிய ஆர்த்தி, புவனேஸ்வரி, சரண்யா ஆகியோரை பரமேஸ்வரன் ஓடிச்சென்று காப்பாற்றினார். ஆனால் உமா, பூஜா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மூன்று மாணவிகளை காப்பற்றிய சிறுவன் பரமேஸ்வரனுக்கு வீரதீர செயலுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. வரும் 26ம் தேதி புதுடெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பிரதமர் இந்த விருதை வழங்குகிறார்.

No comments:

Post a Comment