Saturday, 14 January 2012

விண்ணப்பங்கள் வரவேற்பு : வேலைவாய்ப்பற்றோர் அரசு உதவித்தொகை

சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசால், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 31.12.2011 தேதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தனியார் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பவராகவும் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், உரிய விண்ணப்ப படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே, உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.



No comments:

Post a Comment