Wednesday, 18 January 2012

எஸ்எஸ்எல்சி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்

ஆங்கில வினாத்தாளில் 50% ஒரு மார்க் கேள்வி
தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னையால், கடந்த ஆண்டு ஆகஸ்டில்தான் வகுப்புகளே துவங்கின. பாடப்புத்தகங்கள் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
இதற்கிடையில், ஏப்ரலில் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு பாட வாரியாக மாதிரி வினாத்தாள், தேர்வுத்துறை இயக்குனரகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
‘இந்தமுறை அனைத்து பாடங்களிலும் மாணவர்களை சிந்தனையை தூண்டும் வகையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள்கூட மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ளது’ என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆங்கில ஆசிரியர்கள் கூறுகையில், “கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் அதிகளவில் தோல்வியடைகின்றனர். எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்விபெறும் மாணவர்களில் 40 சதவீதத்தினருக்கு ஆங்கிலம்தான் பிரச்னையே. ஆங்கில பாடத்தை புரிந்து கொள்வதில் உள்ள கடினம்தான் இதற்கு காரணம். இலக்கண பிழை, வரிகளை பிழையின்றி கோர்வையாக எழுதுவதில் உள்ள சிக்கல் போன்ற காரணங்களால் மதிப்பெண் குறையும். சமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்படும் ஆங்கில வினாத்தாளில் முதல் தாள் மற்றும் 2ம் தாளில் 50 சதவீதம் ஒரு மதிப்பெண் கேள்விகளாக இருக்கும்.
வினாக்களை ஓரளவு புரிந்து கொண்டு விடையளித்தாலே 35 சதவீத மதிப்பெண்களை எளிதில் ஈட்டி விடமுடியும். தேர்வில் தோல்வியடைவது தவிர்க்கப்படுவதோடு, ஆங்கிலத்தில் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் படிப்பதுதான் சிரமமாக இருக்கும். இலக்கண பகுதிக்கு முதல் தாளில் 25 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை ஓரளவு படித்தாலே 60 சதவீத மதிப்பெண் பெறமுடியும்’ என்றனர்.
ஆசிரியர்கள் தகவல்

No comments:

Post a Comment