Wednesday 18 January 2012

35 கிலோ இலவச அரிசியுடன் மாதம் ரூ 400 உதவித்தொகை

யானைக்கால் நோயாளிகளுக்கு
பி.எச்.டி. இந்தியா நிறுவனத்தின் யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் சூசை மரியான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
யானைக்கால் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அரசு உதவித்தொகை மற்றும் அரசு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
மாதந்தோறும் ரூ.400 உதவித்தொகை வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து உதவி தொகை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யானைக்கால் நோயாளிகள் அந்தந்த சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் சான்று பெற்று உதவித்தொகைகளை பெறலாம்.
மேலும் யானைக்கால் நோயாளிகளுக்கு இலவச பஸ் பாஸ், மாவட்டந்தோறும் தனி காப்பகம் என இரு கோரிக்கைகளையும் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment