மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிரேசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. அருகே உள்ள மேலக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இன்ஜினியரிங் மாணவர். இவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே பழக்கம் இருந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுரேஷ் காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருடன் என நினைத்து அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சுரேஷும் காதலியை காட்டிக்கொடுக்காமல் தான் திருட வந்ததாக ஒப்புக்கொண்டார். இதில் அவருக்கு சிறைத்தண்டனையும் கிடைத்தது. இந்நிலையில் தற்போது மாணவி சுரேஷுடன் பழகுவதை தவிர்த¢ததாக தெரிகிறது. இதனால் மனம் வருந்திய சுரேஷ் நேற்று காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கிரேசியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து தரவேண்டும் எனவும் கேட்டு தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இருதரப்பு பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிரேசி சுரேஷுடன் தனக்கு காதல் இல்லை எனவும், பெற்றோர் தான் முக்கியம் எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் சுரேஷுக்கும் அறிவுரை கூறினர். அவரும் கிரேசிக்கு இனி தொல்லை கொடுக்கமாட்டேன் என உறுதியளித்தார். போலீசார் முன்னிலையில் காதலர்கள் பிரிந்து பெற்றோருடன் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment