Tuesday 5 June 2012

மத்திய அரசு கூடுதல் வரி திட்டத்தால் டீசல் கார் விலை உயரும்?

டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வரி உயர்வு பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் நேற்று தெரிவித்தார்.
india-diesel-car-price-to-go-upடீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. அப்படியிருந்தும் டீசலின் விலையில் லிட்டருக்கு ரூ 15.35 வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, டீசல் கார்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை குறையும். அதன் மூலம், டீசல் பயன்பாடு குறையும் என மத்திய அரசு கருதுகிறது.
இதனால், டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க முடிவெடுத்தது. இதற்கு வாகன உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்ஜெட்டில் வரி உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க மத்திய நிதியமைச்சகம் மீண்டும் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து, மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், �இந்த வரியை உயர்த்தும் திட்டத்தை நிதியமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெறுகின்றன. விரைவில் முடிவெடுக்கப்படும்� என்றார். தற்போது, 1200சிசி திறன் கொண்ட பெட்ரோல் கார் மற்றும் 1500சிசி திறன் கொண்ட டீசல் காருக்கு 12 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.அதுவே 4 மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட கார் என்றால், 24 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை விட அதிக சிசி திறன் கொண்ட கார் என்றால் 27 சதவீத வரியும், ரூ 15,000 கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது.
டீசல் கார்கள் மீதான இந்த உற்பத்தி வரி மேலும் அதிகமானால், கார் விலை ரூ 50,000 முதல் ரூ 1 லட்சம் வரை உயரலாம்.

No comments:

Post a Comment