ஜப்பானில் படிக்க ஜப்பான் அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறப்பு பயிற்சி கல்லூரி மூலம் நடத்தப்படும் 3 ஆண்டு படிப்பில் தொழில்நுட்பம், சுயகவனிப்பு மற்றும் உணவூட்டவியல், கல்வி மற்றும் நலத்துறை, வியாபாரம், ஆடை வடிவமைத்தல் மற்றும் குடும்ப பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பொதுக்கல்வி, இதர துறைகள் இவற்றில் அடங்கும்.
தொழில்நுட்ப கல்லூரிகளில் 4 ஆண்டு படிப்புகள் நடத்தப்படுகிறது. அவற்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங், தகவல் தொலைத்தொடர்பு மற்றும் நெட்ஒர்க் இன்ஜினியரிங், மூலப்பொருள் பொறியியல், கட்டிட கலை மற்றும் சிவில் இன்ஜினியரிங், கடல்சார் பொறியியல், பிற துறைகள் உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.
பல்கலைக்கழகம் மூலம் 5 ஆண்டு இளநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல், இயற்கை அறிவியல் ஆகியவை நடத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடக்க இருக்கும் எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நடக்கும் நாள் மற்றும் நேரம் மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இந்த தேர்வு எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
தேர்வு முடிவுகள் 2013 பிப்ரவரிக்குள் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜப்பானிய தூதரக வளாகம், 12/1, செனடாப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18ல் பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர், 044-2432 3860, 63 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தகுதிகள்
படிக்க விரும்புவோர் 1991 ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகும், 1996 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும். மேலும் பிளஸ் 2 அல்லது உயர்நிலை படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட ஜப்பானிய மொழி கண்டிப்பாக கற்க வேண்டும். ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும்.
No comments:
Post a Comment