இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதேபோல் குவைத்திலும் கொண்டு வர எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இஸ்லாமியம், முகமது நபிகளை பழித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹமத் அல்நகி என்பவரை குவைத் போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இஸ்லாமியத்தை பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. இந்த சட்டத் திருத்தத்துக்கு மக்களிடம் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. குவைத்தில் கடவுள், இஸ்லாமியத்தை பழிப்பது சட்டப்படி குற்றம். இதற்கு இப்போது சிறை தண்டனை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment