பணி நிமித்தம் நிற்கும் வரிசையில் ....
குறுக்கிடும் வேளையில்...
'பொறம்போக்கு' புலம்பல் வேண்டாம்
என்றேனும் ..உங்களுக்கு நானோ ..
எனக்கு நீங்களோ ..
குருதிகொடை செய்ய நேரிடலாம்
எங்காவது பார்க்க நேர்ந்தால்
பாங்காக சிரித்து வைப்போம் ..
'அலட்சிய' முகம் வேண்டாம் '
உங்களுக்கு நானோ..
எனக்கு நீங்களோ ...இன்னொருநாள்
கடவுளாய் உதவக்கூடும்
வாகனம் ஓட்டும் நண்பர்களே ...
எதிரே தவறுதலாய் விரைந்தாலும்
'சாவு கிராக்கி' என வாழ்த்தல் வேண்டாம்
உங்கள் உடலை.. நானோ ..
என் உடலை நீங்களோ .. செத்தபின்
தகனம் செய்யக்கூடும் ..
உலகம் சிறிது.. வாழ்க்கை அதனினும் சிறிது ...
அறியாதவர்களா நாம் ...
No comments:
Post a Comment