ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மாரா, எலன், ப்ளூன், ஆகிய மாணவிகளும் தைஸ் என்ற மாணவனும் அங்குள்ள போன்றிஸ் பல்கலைக் கழகத்தில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் பற்றி படித்து வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஹாலந்து மாணவிகள் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று புரோட்டா தயாரிப்பது குறித்து மாஸ்டரிடம் கேட்டறிந்தனர்.
இவர்கள் நான்குபேரும் இந்தியாவில் இந்த சிகிச்சைபற்றிய பயிற்சி பெறுவதற்காக கடந்த மாதம் 3ம் தேதி இந்தியா வந்தனர். திருச்சியிலுள்ள புனித சிலுவை கல்லூரியில் இந்த துறை சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்கள் கன்னியாகுமரியை சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், நாங்கள் முதன் முறையாக இந்தியா வந்துள்ளோம். தமிழகத்தில் பிரபலமான புரோட்டா எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புரோட்டாக்களை தயாரிக்க நாங்கள் கற்றுக்கொண்டோம்.
இந்திய நாடும், இந்த நாட்டின் கலாச்சாரமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. இந்தியாவில் உள்ள வானிலை எங்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
எல்லாவற்றிலும் மேலாக இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.6 வார காலம் இந்தியாவில் தங்கி இருந்து பயிற்சியை முடித்து எங்கள் நாட்டுக்கு செல்ல இருக்கிறோம். ஆனால் இந்தியாவையும் , இந்தியர்களையும் எங்களால் என்றுமே மறக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment