Saturday, 4 February 2012

பேரவை தகவல் : மார்த்தாண்டம் பஸ்நிலைய பணி மார்ச் இறுதிக்குள் நிறைவடையும்

மார்த்தாண்டம் பஸ்நிலைய விரிவாக்கப்பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது "மார்த்தாண்டம் பஸ்நிலையம் அமைக்கும் பணி விரைவாக முடிக்கவும், பஸ் நிலையத்தில் பயணிகள் நடமாடும் இடங்களில் உள்ள கடைகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்குமா? என நேற்று கேள்வி எழுப்பினர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளித்து பேசியதாவது: மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தற்போது 13 பஸ் நிற்க இடமும், 14 கடைகளும் உள்ளது. இப்போது மேற்கொண்டுள்ள விரிவாக்கப்பணிகளின் காரணமாக இங்கு 23 பஸ்கள் நிற்க இடமும், 24 கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண் மற்றும் பெண் பயணிகள் பயன் படுத்த தனித்தனி கழிப்பி டங்களும், 6 குளியல் அறைக ளும் உருவாக்கப்பட்டு வரு கிறது. இப்பணிகள் அனைத் தும் மார்ச் 31ம் தேதியுடன் நிறை வடைந்துவிடும். பஸ் நிலையங்களில் பயணிகள் நடமாடும் இடங்களை ஆக்கிரமித்து கடைகள் வைக்க உள்ளூரில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள்தான் காரணம். இதுபோன்ற கடைகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண் டாலும், முக்கிய பிரமுகர் களின் செல்வாக்கை பயன் படுத்தி அதிகாரிகளை தடுத்து விடுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment