ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகங்களில் படிக்கும் திட் டத்தை அடுத்த கல்வியாண்டில் இருந்து அமல் படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
தற்போது, ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் ஒரு பாடப்பி ரிவை படிக்கும் படிக்கும் மாணவர்கள், அதே காலக்கட்டத்தில் மற்றொரு படிப்பை படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. கல்வித் தகுதிம், அறிவை வளர்த்து கொள்வதிலும், அதிகம் படிக்கும் விருப்பமும் உள்ள மாணவர்களுக்கு இது பெரிய தடையாக உள்ளது. இதுபோன்ற குறையை போக்க, ஒரே நேரத்தில் 2 பல்கலைக் கழகத்தில் படிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
இது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், “ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அதே கல்வியாண்டில் வேறொரு பல்கலைக் கழகத்திலும் படிக்கும் திட்டத்தால் (மெட்டா & யுனிவர்சிட்டி) அதிக பயன் பெறுவார்கள். உதாரணத்துக்கு, கான்பூர் ஐஐடி.யில் படிக்கும் மாணவர், அதே நேரத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பண்டைய வரலாறு பாடத்தையோ அல்லது இந்திய மருத்துவ கல்வி நிலையத்தில் கணிதத்தையோ படிக்க முடியும்.
இதற்காக, நாடு முழுவதும் 31 ஆயிரம் கல்லூரிகளும், 6400 பல்கலைக் கழகங்களும் அடுத்த 6 மாதங்களில் இணைக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment