Saturday, 4 February 2012

ஜெனிலியா திருமணம் மும்பையில் நடந்தது : நடிகர், நடிகைகள் வாழ்த்து


நடிகை ஜெனிலியா, இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மராட்டிய முறைப்படி மும்பையில் நேற்று நடந்தது. ஏராளமான திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் 9 வருடங்களாக காதலித்து வந்தனர். ரிதேஷ் தேஷ்முக், மகராஷ்டிர முன்னாள் முதல்வரும் இப்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன். காதலை மறுத்து வந்த ஜெனிலியாவும் ரிதேஷும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடந்தது. மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகினர் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மத்திய அமைச்சர் சரத் பவார், பிருத்விராஜ் சவுஹான், பிரபுல் படேல் உட்பட பல அரசியல் தலைவர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment