சிசிஎல் எனப்படும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போட்டி இப்போது நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்போட்டி கொச்சியில் நடந்தது. இதில் இந்தி, தமிழ், மலையாள நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி நடந்தது.
விடிய விடிய நடந்த இந்தப் பார்ட்டியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு பிரியாமணி தனது அறைக்கு கிளம்பினார். அப்போது போதையிலிருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி என்பவர் பிரியாமணியின் கையைப் பிடித்து இழுத்து கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். இதை எதிர்பார்க்காத பிரியாமணி அவரை தூர தள்ளினாராம்.
இதை பார்த்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஜோஷியை சமாதானப்படுத்தி மீண்டும் பாருக்கு அழைத்து சென்றார். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சச்சினை திட்டி டிவிட்டரில் பிரியாமணி போஸ்ட் செய்தார் என்றும் பிறகு அவசரம் அவசரமாக அதை நீக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, “இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை. யாரோ வேண்டுமென்றே திரித்து கூறியுள்ளனர். அன்று மாலைதான் சச்சின் ஜோஷி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த வருடம் நடந்த போட்டியின் போது நானும் கலந்துகொண்டேன் என்பதால் இந்தி நடிகர்கள் டீமில் எனக்கு சிலரை தெரியும். எல்லோரும் நலம் விசாரித்துக்கொண்டோம். அவ்வளவுதான். நீங்கள் சொல்வது போல் ஏதாவது சம்பவம் நடந்திருந்தால் நானே அதை வெளியில் சொல்லியிருப்பேன்” என்றார் பிரியாமணி.
No comments:
Post a Comment