Tuesday, 13 December 2011

மதுவால் ஒருவரின் உயிரை பறித்து விட்டு வாழ்வை தொலைத்து நிற்கும் குமரி இஞ்சினிரியிங் வாலிபர்கள்

"ஆபாசமாக திட்டியதால் கொன்றோம்."
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் புலிக்கோடு பகுதியை சேர்ந்த பிரபு (24), ரத்தீஸ் (24) என்பது தெரிந்தது. தூங்கிக் கொண்டு இருந்தபோது அந்த வாலிபரின் காலை மிதித்ததால் ஏற்பட்ட தகராறில், மணலை வாயில் திணித்து கொன்று விட்டதாக போலீசில் 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், "நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். "தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், எனது சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டு விட்டது. தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் மேஸ்திரியாக வேலை செய்கிறேன். ரத்தீஸ் கொத்தனாராக வேலை செய்கிறார்.
எங்களுடன் 7 பேர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) அன்று வேலை எதுவும் இல்லை. அதனால், ராயப்பேட்டையில் உள்ள கான்ட்ராக்டர் சேகர் என்பவரை சந்திப்பதற்காக சென்றோம். அவர் கூலிப்பணம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு பட்டினப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினோம்.
மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்றோம். அங்கு மது அருந்து விட்டு குளித்தோம். மீண்டும் இரவிலும் மதுபாட்டில்கள் வாங்கி வந்து, கலங்கரை விளக்கம் அருகில் மது அருந்தினோம்.
போதையேறிய பிறகு கடற்கரை மணலில் தூங்குவதற்காக நடந்து சென்றோம். அப்போது, வழியில் வாலிபர் ஒருவர் படுத்து இருந்தார்.
போதையில் தள்ளியாடியபடி சென்றபோது, அந்த வாலிபரை மிதித்து விட்டோம். தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், எங்களை பார்த்து ஆபாச வார்த்தைகளில் திட்டினார்.
இதனால், எங்களுக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அந்த வாலிபரை அடித்து உதைத்தோம். அதனால் "காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள்” என கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு யாரும் வந்து விடக்கூடாது என பயந்து, அந்த வாலிபரின் கைகளை ரத்தீஸ் பிடித்துக்கொள்ள, அவரது வாயில் மணலை திணித்தேன்.
இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டார். அதிர்ச்சியடைந்த நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அதே பகுதியில் மணலை தோண்டி புதைத்தோம். இடுப்பு வரை புதைத்து விட்ட பிறகு, போலீசார் வந்து எங்களை பிடித்து விட்டார்கள்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

No comments:

Post a Comment