Tuesday, 13 December 2011

குமரி (மார்த்தாண்டம்) தொடர் சோகம் : ரூ 650 : பெண் தீக்குளித்து தற்கொலை - கணவரும் கருகினார்

எதுவும் அறியாத 2 குழந்தைகள் 
மார்த்தாண்டம் அருகே கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகினார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி கடவிளை பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (35). லோடுமேன். இவரது மனைவி விஜயா (33). இவர்களுக்கு சுதீஸ் (9), ரதீஸ் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன் தினம் தனது சட்டை பையில் ரசல்ராஜ் ரூ.650 வைத்திருந்தார். அந்த பணத்தை கணவருக்கு தெரியாமல் விஜயா எடுத்து, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி இருக்கிறார். நேற்று மாலை இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு தெரியாமல் ஏன் பணம் எடுத்தாய்? என மனைவியிடம் ரசல்ராஜ் கேட்டார். அதற்கு அவர் நான் பணம் எடுத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை தான் வாங்கினேன் என கூறினார். கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் , மனைவியை ரசல்ராஜ் கடுமையாக திட்டி இருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று, வாசல் அருகில் ரசல்ராஜ் நின்று கொண்டிருந்தார். வீட்டுக்குள் இருந்த விஜயா தனது கணவர் திட்டியதால் மன வேதனையில், மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். 
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரசல்ராஜ் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இருவரும் தீயில் கருகி அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை விஜயா இறந்தார். ரசல்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். (Tamil Murasu)
என்னதான் சொல்ல???? அனுதாபம் தெரிவிப்பதா??? கோபத்தை கொட்டி தீர்ப்பதா???
ஏன் இந்த பெண் தான் பெற்ற குழந்தைகள் வாழ்க்கையை கூட எண்ணி பார்க்க வில்லை???
ஒரு நொடி பொழுதின்... சஞ்சலம்... ஆத்திரம்.... குடும்பத்தை குதறி விட்டது.

No comments:

Post a Comment