முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. கேரளாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தேனி மாவட்ட மக்கள் கொந்தளிந்து எழுந்துள்ளனர். அங்கு, 9வது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறில் ஏலத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழர்கள் இன்று கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 1500 பேர் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஆட்டோக்கள் எதுவும் இன்று இயக்கப்படவில்லை.
கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment