தமிழக பொறியாளர்களுக்கு பாதுகாப்பு
பெரியாறு அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் தலைமை பொறியாளருமான விஜயகுமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் கேரள போலீசாரை நீக்கிவிட்டு, மத்திய போலீசாரை நியமிக்க வேண்டும், போதுமான அளவு தீயணைப்பு வீரர்களை நியமிக்க வேண்டும், நவீன தீயணைப்பு கருவிகளை நிறுவ வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை ஏற்கனவே அணையை ஆய்வு செய்த குழு, மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அமல்படுத்தவில்லை. அணைப்பகுதியை கேரளாவை சேர்ந்தவர்கள் ஆக்ரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதற்கு கேரள அரசு உடந்தையாக உள்ளது. அந்த ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அணை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு, தமிழகம், கேரள அரசின் தலைமை செயலாளர்களுக்கும், தேனி கலெக்டர், எஸ்.பி.க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடையடைப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் தினமும் 1500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படும். இதன்மூலம் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இவற்றில் 80 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. பொள்ளாட்சி, பாலக்காடு வழியாகவும், கம்பம், போடி மெட்டு, குமுளி வழியாகவும், நாகர்கோவில், நெல்லை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் அனுப்பப்படுவது வழக்கம். மீதி 20 சதவீத காய்கறிகளே தமிழகத்தில் விற்கப்படும்.
கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய சுமார் 1000 டன் காய்கறிகள் தடைபட்டுள்ளது.
No comments:
Post a Comment