Wednesday, 25 April 2012

தலா ரூ 1 கோடி நஷ்டஈடு : கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இத்தாலி கப்பல் நிறுவனம் வழங்கியது

கொல்லம் கடல் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா ரூ 1  கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதால், இத்தாலி கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர்.
கொல்லம் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த அஜீஸ் பிங்கோ, குளச்சலை (தற்போது கொல்லத்தில் வசித்தவர்) சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ, ஜிரோனை கொல்லம் போலீசார் கைது செய்து, திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைத்தனர். கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது.
பலியான 2 மீனவர்களின் குடும்பத்தினரும், மீன்பிடி படகின் உரிமையாளரும் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காணப்பட்டது. அதன்படி, கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடியும், படகு உரிமையாளருக்கு ரூ 17  லட்சமும் நஷ்டஈடு வழங்க இத்தாலி அரசு சம்மதித்தது. நஷ்டஈடு அளிப்பதால் இத்தாலி வீரர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும்படி நிபந்தனை விதித்தது. இதற்கு மீனவர்களின் குடும்பத்தினர் சம்மதித்தனர்.
இதையடுத்து கொச்சி லோக் அதாலத் நீதிமன்றத்தில் இருதரப்புக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன்படி, அஜீஸ் பிங்கோவின் 2 சகோதரிகளிடமும், ஜெலஸ்டினின் மனைவி டோரம் மாவுக்கும் தலா ரூ. 1 கோடிக்கான காசோலையை இத்தாலி அரசு அதிகாரிகள் கொடுத்தனர். இத்தாலி அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இத்தாலி வீரர்களுக்கு எதிராகவும், கப்பல் நிறுவனத்துக்கும் எதிராகவும் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
வீரர்கள் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “துப்பாக் கிச் சூட்டில் இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 கோடியும், படகின் உரிமையாளருக்கு ரூ 17 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தாலி வீரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று இத்தாலி அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கோரி னார். தொடர்ந்து, விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

1 comment:

  1. srilankan ships killing our INDIAN fishermen see the difference between KERALA GOVT and TAMIL NADU

    ReplyDelete